திட்டக்குடி அருகே சிருமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் அங்கே குளம் போல் தேங்கி இருக்கிறது. இதில் பன்றிகள் மேய்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.