கடலூர் அருகே நத்தப்பட்டில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் கட்டிடங்கள் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதற்கிடையில் அங்கு தனியார் செல்போன் டவர் அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம். ஆகவே குடியிருப்புகளில் செல்போன் டவர் அமைப்பதை தடுக்க வேண்டும்.