கடலூர் மாநகராட்சி பஸ் நிலையத்தில் உள்ள மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் பழுதாகி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிா்க்க மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரத்தை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.