நியாய விலை கடை அமைக்கப்படுமா?

Update: 2022-07-05 14:34 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் எண்டத்தூரை அடுத்து ஆலப்பாக்கம், சின்ன ஆலப்பாக்கம் போன்ற கிராமங்கள் உள்ளன. இதில் ஆலப்பாக்கத்திலிருந்து சின்ன ஆலப்பாக்கத்துக்கு சென்று வர 1 1/2 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது. மேலும் சிறிய ஆலப்பாக்கத்தில் ரேஷன் கடை இல்லாததால் ஆலப்பாக்கம் வரை செல்ல வேண்டியுள்ளது. வயதானவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து ரேஷன் வாங்க சிரமப்படுகிறார்கள். எனவே சின்ன ஆலப்பாக்கத்தில் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்