பாழடைந்து கிடக்கும் பொது கழிவறை

Update: 2022-08-18 12:02 GMT
கடலூர் முதுநகர் 44-வது வார்டு கவிகாளமேகம் தெருவில் உள்ள பொது கழிவறை முறையான பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், முதியோர் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஆகவே பாழடைந்த கட்டிடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்