திட்டக்குடி அடுத்த கோழியூர் 17-வது வார்டு வழியாக செல்லும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 2 சிறிய பாலங்கள் பல மாதங்களுக்கு முன்பு உடைந்தது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே புதிய பாலங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.