சிதம்பரம் நகரில் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் புரண்டு எழுந்து, குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் பன்றிகள் தொல்லையால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.