கடலூர் மாநகரின் மையப் பகுதியில் பழைய கலெக்டர் அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் வனத்துறை, அருங்காட்சியகம், மீன்வளத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான கட்டிடம் செயல்படாமல் உள்ளது. அலுவலகத்தின் சுற்றுச்சுவரில் செடி ,கொடிகள் முளைத்து வீணாகி வருகிறது. கட்டிடமும் சேதம் அடைந்து வருகிறது. ஆகவே பழைய கலெக்டர் அலுவலகத்தை சீரமைத்து வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களை இங்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.