மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2023-07-19 13:52 GMT

மதுப்பிரியர்கள் அட்டகாசம்

திருப்பூர் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட எம்.எஸ்.நகர் அம்பேத்கர் காலனியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மைய கட்டிடத்திற்கு மேல் இரவு நேரங்களில் மர்ம ஆசாமிகள் மது குடிக்கிறார்கள். கட்டிடம் மேலே ஏறி மது குடித்துவிட்டு மது மதுபாட்டில்களை உடைத்துப்போட்டும் மேலே உள்ள சோலார் பேனல் தகடுகளை சேதப்படுத்தியும் மைய கட்டிடத்தை சுற்றியும் பல இடங்களில் மது பாட்டில்கள் உடைத்து போட்டு விட்டு சென்று விடுகின்றனர். 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பால்வாடி மையத்திற்கு வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

ரஞ்சித்குமார் தனபால்,

திருப்பூர்.

70103 93924

மேலும் செய்திகள்