சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இதுவரை வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது .மேலும் போக்குவரத்து பாதிப்பும் உருவாகி வருகிறது .இதை தவிர்க்க வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டியது அவசியம்.