சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் இங்கு வந்து தான் பஸ் ஏறி வெளியூர்களுக்கு செல்கின்றனர். ஆனால் பொதுமக்கள் வசதிக்காக அங்கு கழிப்பறை கட்டப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?