கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட இனியநகரில் உள்ள சாலையில் வளைவான பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த விபத்து தடுப்புச்சுவர் சாலை விரிவாக்க பணியின்போது அகற்றப்பட்டது. அதன்பிறகு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தின் ஓரத்தில் விபத்து தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.