மேற்கூரை இல்லாத ரெயில் நிலையம்

Update: 2022-07-22 11:23 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் என்பது முற்றிலும் இல்லை. குறிப்பாக நடைமேடையில் சிறிது தூரம் மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மேற்கூரை ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் மழையிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் காத்திருந்து ரெயில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் ரெயில் நிலையம் முழுவதிலும் மேற்கூரை அமைக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்