திட்டக்குடி அருகே உள்ள கீழ்கல்பூண்டி பேருந்து நிலையம் அருகில் ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பல மாதங்களாக செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த வழியாக தான் செல்கின்றனர். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா செயல்படாமல் உள்ளதால் குற்ற சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க முடியாத சூழல் ஏற்படும். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே கண்காணிப்பு கேமராவை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.