புவனகிரி பகுதியில் ஏராளமான குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் தனியாக செல்லும் சிறுவர்களின் கைகளில் உள்ள தின்பண்டங்களை பிடுங்கி சாப்பிடுகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுகின்றன. மேலும் தெருக்களில் தனியாக நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.