நடுவீரப்பட்டு அருகே பத்திரக்கோட்டை கிராமத்தில் உள்ள மெயின் ரோடு வழியாக வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். மேலும் முதியோர் மற்றும் சிறுவர்கள் சாலையை கடக்க முயற்சிக்கும் போது, அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. அதனால் விபத்துகளை தவிர்க்க பத்திரக்கோட்டை மெயின்ரோட்டில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.