காட்சிப்பொருளான வழிகாட்டி பெயர் பலகை

Update: 2023-02-22 15:16 GMT


காட்சிப்பொருளான வழிகாட்டி பெயர் பலகை

திருப்பூரில் திருமுருகன்பூண்டி-பூலுவப்பட்டி ரிங்ரோடு முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருமுருகன்பூண்டி பகுதியில் வைப்பதற்காக தயார் செய்யப்பட்ட வழிகாட்டி பெயர் பலகை இதுவரை அங்கு வைக்கப்படவில்லை. அந்த பெயர் பலகை யாருக்கும் பயனின்றி நீண்ட நாட்களாக திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும் வகையில் அந்த வழிகாட்டி பெயர் பலகையை சரியான இடத்தில் உடனடியாக வைக்க வேண்டும்.

சுப்பிரமணியன்,திருமுருகன்பூண்டி

9894266548

மேலும் செய்திகள்