வடலூர் அருகே உள்ள கருங்குழியில் இருந்த மிகப் பழமையான நூலக கட்டிடம் பழுதடைந்தது. இதனால் அந்த நூலக கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால் கட்டிடம் இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.