நாகர்கோவிலில் இருந்து தேவிக்கோடு, தொழிச்சல், காக்கவிளை வழியாக மிடாலத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் காலை, மாலை, இரவு ஆகிய 3 வேளைகளில் இயக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, நாகர்கோவிலில் இருந்து மிடாலத்துக்கு தேவிக்கோடு வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
