குரங்குகள் தொல்லை

Update: 2023-01-11 17:11 GMT
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் திறந்திருக்கும் வீடுகளுக்குகள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களை கடிக்க சீறிப்பாய்கின்றன. மேலும் தெருக்களில் நடந்து செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் கையில் இருக்கும் தின்பண்டங்களை பிடுங்கி செல்கின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்