புவனகிரி தாலுகா வடதலைக்குளம் கிராமத்தில் வடிகால் வசதி இல்லை. இதன் காரணமான மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளில் குளம் போல் தேங்குகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வடதலைக்குளம் கிராமத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.