கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கடைவீதி பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படாமலும், வடிகால் வாய்க்கால் அமைக்காமலும் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் சாலை விரிவாக்கம் செய்யப்படாததால், அப்பகுதியில் கடு்ம் போக்குவரத்து நெரிசல் எற்படுகிறது. எனவே அப்பகுதியில் சாலை விரிவாக்கம், வடிகால் அமைத்தல் பேன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.