கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலையில் இருந்து சென்னை, சேலம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் பயணிகள் உபயோகப்படுத்த கழிப்பறை இல்லை. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலையில் கழிப்பறை அமைத்து தர அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?