குரங்குகள் அட்டகாசம்

Update: 2022-12-28 18:19 GMT
சேத்தியாத்தோப்பு அருகே கிழாங்காடு, சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் கையில் இருக்கும் திண்பண்டங்களை பிடுங்கி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்