திட்டக்குடி பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை உள்ளது. இந்த அறை பல நாட்களாக திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல வரும் தாய்மார்களும், வெளியூர்களில் இருந்து வரும் தாய்மார்களும் தங்களது குழந்தைகளுக்கு பால் புகட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பாலூட்டும் தாய்மார்கள் அறையை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.