ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் கையில் இருக்கும் திண்பண்டங்களை பிடுங்கி செல்கின்றன. மேலும் இவைகள் திறந்திருக்கும் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து செல்கின்றன. எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.