கடலூர் குமாரபேட்டை பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி அப்பகுதியில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கடலூர் குமாரபேட்டை பகுதியில் வடிகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.