கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளம் பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவைகள் அங்குள்ள குப்பைகளை கிலறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் மாநர மக்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிா்க்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.