பூட்டிக்கிடக்கும் சமுதாயநலக்கூடம்
பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சி கடந்த 2010-2011-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்.பி. மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இந்த சமுதாய நலக்கூடத்தில் 2 நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் சமுதாயநலக்கூடம் முறையாக பராமரிக்கப்படாததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இல்ல நிகழ்ச்சிகள் சமுதாய நலக்கூடத்தில் நடைபெறவில்லை.
தற்போது இந்த சமுதாய நலக்கூட வளாகத்தில், முட்செடிகள், செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவேசம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் பூட்டியே கிடக்கும் சமுதாயநலக்கூட வளாகத்தில் உள்ள செடி, கொடிகள், முட்புதர்களை அகற்றி சமுதாயநலக்கூடத்தை பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் .
ராமர்,பல்லடம்
9942051200