நெல்லிக்குப்பம் நகராட்சி அம்மா உணவகத்தில் உணவு அருந்தும் இடத்தில் மேல்கூறை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மேற்கூறை எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் இருப்பதால், அங்கு சாப்பிட வரும் மக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.