கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியன்பேட்டை, மூலக்குப்பம் போன்ற கிராமங்களின் இருந்து மழைநீர் அய்யனார் கோவில் அருகே உள்ள ஏரிக்கரையில் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் வாய்க்காலை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. மேலும் வடிகால் முறையாக கட்டப்படாமல் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வடிகாலை முறையாக கட்டித்தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.