கடலூர் மாவட்டம் கூடலூருக்கும், அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூருக்கும் இடையே வெள்ளாறு செல்கிறது. 2 மாவட்டத்தை இணைக்கும் வகையில் அங்கு இதுவரை தரைப்பாலமோ, மேம்பாலமோ அமைக்கவில்லை. ஒவ்வொரு மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அங்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் இரு மாவட்ட மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு போக்குவரத்து வசதிக்காக மேம்பாலம் அமைக்க வேண்டும்.