குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அயன்குறிஞ்சிப்பாடியில் பன்றிகள் தொல்லை அதிகாித்து வருகின்றது. இவைகள் அங்குள்ள நடவு வயலுக்குள் புகுந்து நாசம் செய்வதோடு, குப்பைகளை கிலறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அட்டூழியம் செய்து வரும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.