இரவு காவலாளி நியமிக்க வேண்டும்

Update: 2022-10-26 10:15 GMT
ஸ்ரீமுஷ்ணம் நகரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் சுமார் 500 முதல் 750 நோயாளிகள் வரை வந்து மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதிலும் இரவு நேரங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மருத்துவமனையை சுற்றி சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். அதில் பலபேர் மது அருந்திவிட்டு நோயாளிகளை அழைத்து வருவதுடன் பணியில் உள்ள பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் தகராறு செய்கின்றனர். இதனால் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஊழியர்கள் பாதுகாப்பின்றி சேவை புரிந்து வருகின்றனர். எனவே ஆஸ்பத்திரி ஊழியர்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக இரவு நேரத்தில் மட்டுமாவது இரவு நேர காவலாளியை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.

மேலும் செய்திகள்