கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டி பாளையம் ரோட்டில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி சக்தி நகர், சிவா நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. தற்போது மழை பெய்த மழையால் தேங்கி நிற்கும் நீரில் பன்றிகள் சுற்றி திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது .எனவே இந்த பன்றிகள் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.