கடலூர் அருகே உள்ள கொண்டங்கி ஏரி தூர்ந்து போய் காணப்படுகிறது. ஏரியின் கரைகளும் சேதமடைந்துள்ளது. இதனால் ஏரியில் அதிகளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. அதனால் ஏரியை முறையாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.