குள்ளஞ்சாவடி அருகே சத்திரம், அப்பியம்பேட்டை, மதனகோபலபுரம், ஆர்.சி.காலனி மற்றும் வேகக்கொல்லை ஆகிய பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்பட் அனைத்து தரப்பு மக்களும் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளில் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று மதுபாட்டில்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்.