கடலூர் வண்ணாரப்பாளையம் மெயின்ரோட்டில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் சாலையில் படுத்து உறங்குகின்றன. இதனால் போக்குவரத்து நொிசல் ஏற்படுவதோடு விபத்துகள் நிகழ்வதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, மாட்டின் உாிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.