வீராணம் ஏரியில் இருந்து சாத்தமங்கலம், பரதூர், ஒரத்தூர் வரை செல்லும் பாசன வாய்க்காலில் ஆகாய தாமரை அதிகமாக உள்ளது. இது தவிர செடி, கொடிகளும் படர்ந்து உள்ளதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை கவனித்து இந்த பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?