குறிஞ்சிப்பாடி தாலுகா கம்பளிமேடு நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் நெல்கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் நெல் அனைத்தும் வீணாகி வருகிறது. இதை தவிர்க்க பழுதான நெல்கொள்முதல் எந்திரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.