கடலூர் முதுநகரில் குடியிருப்பு பகுதியில் நாளுக்கு நாள் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து அங்குள்ள குப்பைகளை கிளறிவிட்டும், கழிவுநீரில் மூழ்கி விட்டு வீடுகளின் அருகில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே கடலூர் மாநகராட்சி நிர்வாகம் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.