விருத்தாசலம் அடுத்த வி.சாத்தமங்கலம் கிராமத்தில் குடியிருப்புக்கு மத்தியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. பருவ மழை காலங்களில் அந்த பகுதியில் இருந்து வரும் தண்ணீர் அனைத்தும் இந்த குளத்தில் தான் சேகாிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயா்ந்து காணப்பட்டது.
ஆனால் தற்போது குளத்தின் கரைகள் சேதமடைந்துள்ளது. இதனால் எதிா்வரும் பருவமழை காலத்தில் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குளத்தின் கரையை உடனடியாக அதிகாாிகள் சீரமைத்திட வேண்டும் என்பது, இந்த பகுதியில் குடியிருக்கும் மக்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது.