வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து விடுகின்றன. மேலும் சாலையில் தனியாக செல்லும் சிறுவர்களின் கைகளில் உள்ள தின்பண்டங்களை பிடுங்குகின்றன. இதனால் குரங்குகள் தொல்லையால் அப்பகுதி மக்கள் தினம்தினம் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.