பாழடைந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடை

Update: 2022-09-10 13:54 GMT
வடலூர் அருகே கருங்குழியில் உள்ள பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை முறையான பராமரிப்பின்றி, முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் நிழற்குடை உள்ளே செல்லவே அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பஸ் ஏறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்

மயான வசதி