அவினாசி பேரூராட்சி 18 வார்டுகளிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றிதிரிகின்றன. தெருவில் நடந்து செல்லும் பெண்கள், சிறுவர் உள்ளிட்டோரை பின்தொடர்ந்து வந்து கடித்துவிட்டு ஓடிவிடுகிறது. அவினாசி காந்திபுரம் பகுதியில் 85 வயது மூதாட்டி மற்றும் 50 வயது மதிக்கக தக்க ஒரு நபர் மற்றும் 2 பேரை நாய் கடித்துள்ளது. இவர்கள் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவினாசியில் அதிக அளவில் சுற்றிதிரியம் தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே வீதியில் சுற்றிதிரியும் நாய்களை பிடிக்க பேருராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.