வடலூர் ரயில்வே கேட் முதல் நெய்சர் பஸ் நிறுத்தம் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் உழவர் சந்தையில் இருந்து ரயில்வே கேட்டுக்கு இடைப்பட்ட பகுதியில் விபத்துகள் நிகழவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.