ஆய்க்குடி அருகே உள்ள விந்தன்கோட்டை ஊருக்கு கீழ்பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. அந்த பகுதி மக்கள் அதை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். மேலும் அந்த சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதியும் இல்லை. எனவே தண்ணீர் வசதி ஏற்படுத்தி, பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுகிறேன்.