திட்டக்குடி நகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கழிப்பறை கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆன பின்பும் திறக்கப்படவில்லை.. இது குறித்து பல முறை புகார் அளித்தும் கழிப்பறையை பொது மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கழிப்பறையை உடனே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க வேண்டும்