விருத்தாசலம் அடுத்த வி.சாத்தமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் சேதமடைந்து பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் இந்த கிராமத்திற்கு செவிலியர் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வந்து செல்கிறார். இதனால் இப்பகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சேதம் அடைந்திருப்பதால், அரசு பணமும் விரயமாகி உள்ளது. ஆகவே அந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். இல்லையென்றால் இடித்து அகற்றிவிட்டு புதிய துணை சுகாதார நிலையம் கட்டித் தர நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.