கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியத்தில் நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்லும் பாதசாாிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டி கடிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.